பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்பட அறநிலையத்துறை கோயில்களில் பக்தர்கள் வசதிக்காக தரைவிரிப்புகள், கூலிங் பெயிண்ட், பச்சை நிற மேட் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை மாவட்டத்தில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்கும் வகையில் பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயில் உள்ளிட்ட அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. 98 டிகிரி முதல் 100 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் குடும்பத்துடன் ஆன்மீக தளங்களுக்கு சென்று வருகின்றனர். இப்படி செல்லும் பக்தர்கள் வெயில் காரணமாக கோயில் பிரகாரத்தை சுற்றி வலம் வரும்போது கால்கள் சுடுவதால் சிரமம் அடைகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு பிரசித்தி பெற்ற கோயில் பிரகாரங்களின் நடைபாதைகளில் தேங்காய் நார் விரிப்புகள், வெப்பத்தை தடுக்கின்ற கூலிங் பெயிண்ட் அடித்தல், அடிக்கடி தண்ணீர் தெளிக்க வேண்டும் என அறநிலையத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர், மருதமலை, கோனியம்மன் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மருதமலை முருகன் கோயிலில் பிரகாரத்தை சுற்றி பக்தர்கள் வலம் வர தரைவிரிப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பேரூர் பட்டீஸ்வரர் கோயிலின் பிரகாரத்தை சுற்றி தரையில் கூலிங் பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. கோனியம்மன் கோயிலில் முதலில் கூலிங் பெயிண்ட் அடித்த போதும், பக்தர்கள் கால்கள் சுடுவதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் பச்சை நிற மேட் கோயில் பிரகாரத்தில் போடப்பட்டுள்ளது. இது நல்ல பலன் அளித்துள்ள நிலையில், மாநகரில் அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோயில்களிலும் பச்சை நிற மேட் போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால், பக்தர்கள் வெயிலின் சூடு பாதிக்காத வகையில் பிரகாரத்தை வலம் வந்து சாமி தரிசனம் செய்து வருவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...