சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு, “சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்காவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குங்கள்” என்று வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.


கோவை: கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சரும், மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகருமான சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.



பிரச்சாரத்திற்கு முன், வடவள்ளியில் அமைந்துள்ள முத்தப்பசாமி கோவிலுக்கு சென்ற சுரேஷ் கோபி மற்றும் வானதி சீனிவாசன் சிறப்பு வழிபாடு நடத்தி தரிசனம் செய்தனர்.

பின்னர் அங்கு திரண்டிருந்த மலையாளி மக்களிடம் உரையாற்றிய சுரேஷ் கோபி, வானதி சீனிவாசனை தனது சகோதரியாக குறிப்பிட்டு, அவரை மீண்டும் சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.



தொடர்ந்து முத்தப்பசாமி கோவில் தரிசனத்தை முடித்துவிட்டு, வடவள்ளி மகாராணி அவென்யூ, காட்டு விநாயகர் கோவில் பகுதி, டாட்டா நகர் உள்ளிட்ட இடங்களில் சுரேஷ் கோபி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “வானதி சீனிவாசன் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றினார். மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்காக சட்டமன்றத்தில் தைரியமாக குரல் கொடுத்தார். சட்டமன்றத்தின் சிம்மக் குரலாக விளங்கிய வானதி அக்காவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்”, என்றார்.

மேலும், அவரைப் போன்ற பலர் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும். அதற்காக கோவை வடக்கு மக்கள் வானதி சீனிவாசனை வெற்றி பெறச் செய்ய வேண்டும், என்று கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...