கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந்திர பாபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினார். சிறந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


Coimbatore: கோவை, துடியலூர் வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32 வது ஆண்டு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு எஸ். என் .ஆர் சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் எஸ் .நரேந்திரன் தலைமை தாங்கினார்.கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ.சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்று கல்லூரி அடைந்த வளர்ச்சிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்களின் கல்வி விளையாட்டு மற்றும் ஆராய்ச்சித் துறையில் பெற்ற சாதனைகளை பட்டியலிட்டு ஆண்டறிக்கை வாசித்தார். 



சிறப்பு விருந்தினராக, தமிழக காவல்துறை முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு கலந்துகொண்டார். அவரது ஊக்கமளிக்கும் உரையில், அவர் மாணவர்களை தங்களை மறுவடிவமைக்கவும், நம்பிக்கையுடன் இருக்கவும், பெற்றோருக்கு நன்றியுள்ளவர்களாகவும், வாழ்நாள் முழுவதும் கற்றல் பயணத்தைத் தழுவவும் ஊக்குவித்தார், ஆர்வம், தன்னம்பிக்கை, அறிவு, தகவல் தொடர்பு திறன் மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு அத்தியாவசியமான குணங்களாக அவர் எடுத்துரைத்தார். சர் ஐசக் நியூட்டன், டார்வின் மற்றும் சாக்ரடீஸ் போன்ற சிறந்த ஆளுமைகளின் உத்வேகத்தைப் பெற்ற அவர், ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் மனித முன்னேற்றத்தின் அடித்தளம் என்பதை மாணவர்களுக்கு நினைவூட்டினார். பண்புகளை வளர்க்கும் பல்வேறு செயல்களில் ஈடுபடவும், புதிய வாய்ப்புகளை வரவேற்க திறந்த மனதுடன் இருக்கவும், கற்றல் சக்தியின் மூலம் தங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கு உதவ தங்கள் அறிவையும் திறமையையும் பயன்படுத்த வேண்டும் என்று ஆர்வத்துடன் மாணவர்களை வலியுறுத்தினார்.



மேலும் , இக்கல்லூரியை பற்றியதகவல்கள், கல்லூரி அடைந்த தொழில் நுற்ப வளர்ச்சி ,கல்லூரியில் அமைந்திருக்கும் ஆராய்ச்சி கூடங்கள் பற்றிய தரவு வெளியிட்டு விழா நடைபெற்றது.

கல்லூரியின் விழா மலரை சிறப்பு விருந்தினர் வெளியிட நிர்வாக அறங்காவலர் பெற்றுக்கொண்டார். விழாவின் ஒரு பகுதியாக கல்லூரியில் 25 ஆண்டுகள் பணியாற்றிதுவக்க நாள் முதல் சிறப்பாக சேவையாற்றி வரும்பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களும், காப்புரிமை பெற்று சாதனை படைத்த பேராசிரியர்களும், சிறந்த ஆராய்ச்சி புரிந்தபேராசிரியர்களும் சிறந்த என்சிசி கேடட் விருது ,என்.எஸ்.எஸ் சிறந்த தன்னார்வலர் விருது சிறந்த புதுமைகண்டுபிடிப்புகள் , கலைத்துறையின் சாதனைகள்புரிந்தவர்களுக்குபரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



கல்வியாண்டில் கல்வி விளையாட்டு மற்றும் அனைத்து ஊக்க திறன் மேம்பாடு துறைகளில் சிறப்பாக செயல் புரிந்தமைக்காக தங்கப்பதக்கம் மற்றும் சுழற்கோப்பையுடன் சிறந்த மாணவர் விருது எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறையை சார்ந்த மாதேஷ் என்ற மாணவருக்கும் ,பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் துறையை சார்ந்தஷர்மிளா என்ற மாணவிக்கும் வழங்கப்பட்டது. 

இறுதியில் எலெக்ட்ரிக்கல் அண்ட்எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் பேராசிரியர்அல்லிராணி நன்றி கூறினார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...