கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில் வெளியிடப்பட்டது. கல்வி, ஆன்மிகம், மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.


கோவை: தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை பதிவு செய்த Oceans of Knowledge நூல் வெளியீட்டு விழா, கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.



இந்தியாவில் கடல்சார் ஆராய்ச்சி துறையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவராக டாக்டர் லால் மோகன் பரவலாக அறியப்பட்டவர்.தமிழ் மற்றும் ஆங்கில பதிப்புகளில் உருவாக்கப்பட்ட Oceans of Knowledge நூலை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினர்.



நூலாசிரியரும், ஏ.ஜே.கே கல்வி நிறுவனங்களின் தலைவருமான முனைவர் அஜித்குமார் லால் மோகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக அய்யாவழி சாமி தோப்பு பால பிரஜாபதி அடிகளார், ஜி.ஆர்.ஜி கல்வி நிறுவனங்களின் சேர்பர்சன் முனைவர் நந்தினி ரங்கசாமி, கோவை திருமண்டல துணைத் தலைவர் மற்றும் செயலாளர் டேவிட் பர்னபாஸ், ஆர்த்தோ ஒன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் முனைவர் டேவிட் வி. ராஜன், மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு, சுஜாதா ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் பேசியோர், கடல் உயிரியல், கடல்சார் வளங்கள் பாதுகாப்பு, இயற்கை வளங்கள் காக்கும் முயற்சிகள் உள்ளிட்ட துறைகளில் டாக்டர் லால் மோகன் செய்த பங்களிப்புகளை நினைவுகூர்ந்தனர்.



கடல் உயிரினங்கள், கடல் சூழல் மற்றும் வளங்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வுகளில் சிறந்து விளங்கிய விஞ்ஞானியின் வாழ்க்கைப் பயணத்தை இந்த நூல் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.



கல்வி, ஆன்மிகம் மற்றும் சமூக முன்னேற்றத்தை ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பல்வேறு துறைகளின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றதன் மூலம் சிறப்பு பெற்றது.

இறுதியாக, ஏ.ஜே.கே கல்வி நிறுவனங்களின் இயக்குனர் பிந்து அஜீத் நன்றி உரையாற்றினார்.

Newsletter

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...