தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட திமுக மேற்கு ஒன்றியம் மற்றும் இளைஞரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.


Coimbatore: தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொகுதி மறு வரையறை என்ற பெயரில் மத்திய அரசு சதி செயலில் ஈடுபடுகிறது என்றும் அதற்கு துணைபோகும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியையும் கண்டித்து, தாராபுரத்தில் திமுக இளைஞரணி சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தாராபுரம் கிழக்கு மாவட்ட திமுக மேற்கு ஒன்றியம் மற்றும் இளைஞரணி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தொகுதி மறு வரையறை செய்வதற்கான சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வர முயற்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக கண்டித்தனர்.



கருப்பு கொடிகளை ஏந்தியும், கருப்பு சட்டைகளை அணிந்தும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தொகுதி மறு வரையறை சட்ட மசோதா நகலை தீயிட்டு எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.





இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும், நகல் எரிப்பு போராட்டத்திற்கும் தாராபுரம் திமுக ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.வி. செந்தில் குமார் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு, கோனப்பன் சாலை செந்தில் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திமுக ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...