பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத நிலையில், இறக்குமதி பருத்திக்கான 11 சதவீத வரியை செப்டம்பர் 30 வரை ரத்து செய்ய தொழில் துறையினர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Coimbatore: பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் காரணத்தால் தமிழக ஜவுளி தொழில்துறை மிகுந்த நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளிடமிருந்து இந்திய பருத்தி கழகம் மற்றும் வர்த்தகர்கள் பருத்தியை மிக அதிக அளவில் பெற்று சென்றுவிட்டதால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை . எனவே இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு விதிக்கப்படும் 11% வரியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என, தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தென்னிந்திய மில்கள் சங்கத்தின்( SIMA) முன்னாள் தலைவர் ரவி சாம் கூறும் போது, பருத்திக்கு ஏற்கனவே குறைந்தபட்ச ஆதார விலை(Minimum Support price) அதிகமாக உள்ளதால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்துள்ளது. இதன் காரணமாக வேறு உணவு தானியங்களை பயிரிட்டு வந்த விவசாயிகள் தற்போது பருத்தி பயிரிட ஆர்வம் காட்டு தொடங்கியுள்ளனர். உலக அளவில் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காணப்படும் நிலையற்ற தன்மை ஒட்டுமொத்த ஜவுளி சங்கிலி தொடரில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளிடமிருந்து பருத்தியை, இந்திய பருத்தி கழகம் மற்றும் வர்த்தகர்கள் பெற்று சென்று விட்டதால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே இந்திய ஜவுளி தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீத வரியை ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ரத்து செய்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என்றார்.

தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின்(SISPA) கௌரவ செயலாளர் ஜெகதீஷ் சந்திரன் கூறும் போது, 2026 மார்ச் 1 முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை பருத்தி ஒரு கேண்டி(356 கிலோ) விலை 52 ஆயிரம் ரூபாயிலிருந்து 63 ஆயிரம் ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோவிற்கு ஒரு 31 வரை விலை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை மாற்றங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு, போக்குவரத்து செலவுகள் மற்றும் பிற மூலப் பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்டவை முக்கிய காரணங்கள் ஆகும். 2026 ஜனவரி முதல் மார்ச் வரை நூற்பாலைகள் 18 லட்சம் பேல்கள் ( 1 பேல் = 170 கிலோ) பருத்தி கொள்முதல் செய்துள்ளன. வியாபாரிகள் 32 லட்சத்து 50 ஆயிரம் பேல்கள் பருத்தியை கொள்முதல் செய்துள்ளனர். இத்தகைய நடவடிக்கை கூடுதல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.
எனவே இந்திய பருத்தி கழகம்(Cotton Corporation of India) பஞ்சு வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்களுக்கு பஞ்சை விற்பனை செய்யாமல், பாரபட்சமின்றி நூற்பாலைகளுக்கு மட்டும் தரமான பஞ்சை நியாயமான விலையில் வழங்க வேண்டும். அதே போல் பஞ்சு வியாபாரிகள், நூற்பாலைகள் என்ற பெயரில் பஞ்சை மொத்தமாக கொள்முதல் செய்வதை தடுக்க மத்திய அரசு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.
பருத்திக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரி 11 சதவீதத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும் மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், மின்கட்டணங்களை குறைக்கவும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என்றார்.