வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் பாலித்தின் பைகளை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஓசை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

கோவை மாவட்டத்தின் மிகவும் பிரதிபெற்றதும், சுற்றுலாத் தளமுமாகிய வெள்ளியங்கிரி மலைக்கு ஆண்டுதோறும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வர். அவ்வாறு வருபவர்கள் வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் ஏறும்பொழுது தாங்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களை உண்டுவிட்டு பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை மலைப்பகுதியிலேயே வீசிவிடுவர்.

இவ்வாறான பிளாஸ்டிக் பைகள் மூலம் அந்த மலைப்பகுதியில் உள்ள இயற்கையும், விலங்குகள் உள்ளிட்டவைகளும் பாதிக்கப்பட்டு வந்தன.



இதனைத் தவிர்க்கும் வகையில் கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஓசை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வெள்ளியங்கிரி மலைப்பகுதியின் அடிவாரத்தில் மலை ஏறுவோரிடம் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அவர்கள் கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதலும் செய்தனர்.

இதுகுறித்து, ஓசை அமைப்பின் சையது கூறுகையில், கோவை மாவட்டத்தின் இயற்கை சொர்க்கமான வெள்ளியங்கிரி மலைப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளும், வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்களும் அதிகளவில் வருவர். மேலும், இன்று சித்ராபௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இந்த மலைப்பகுதிக்கு வந்துள்ளனர்.

இதில், பெரும்பாலானோர் உணவு உள்ளிட்ட பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வந்துள்ளனர். அவர்கள் அதனை பயன்படுத்திவிட்டு மலைப்பகுதியிலேயே வீடுவிடுவதால் வெள்ளியங்கிரி மலை தனது இயற்கைத் தன்மையினை இழக்க நேரிடுகிறது. 

இதனை தவிக்கும் வகையில், அவர்களிடம் இருந்து பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டு மக்கும் காகிதத்தால் ஆன பைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மக்கள், தாமாக முன்வந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை தவிர்த்து இயற்கையை பாதுகாக்க வேண்டும்" என்றார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...