கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்காக 2.4 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூன்று இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் இருசக்கர வாகனமும் அடங்கும்.


Coimbatore: கோவை மாவட்டம் பேரூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார், ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்து பணியின்போது விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூன்று இளைஞர்களை கைது செய்து, 2.4 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

பேரூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வினோத் மற்றும் காவலர்கள், ராமசெட்டிபாளையம், சுண்டக்காமுத்தூர், ஆறுமுககவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று குற்றத்தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சதாசிவம் என்பவருக்குச் சொந்தமான வாடகை வீட்டிற்கு அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்ற மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள்விற்பனைக்காக தடை செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்கள் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன், சுண்டக்காமுத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (22), ஹரி ராகவேந்திரன் (22) என அடையாளம் காணப்பட்டனர்.

தொடர்ந்து போலீசார், அவர்கள் பதுக்கி வைத்திருந்த 2.400 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மூவர் மீதும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. போதைப்பொருள் விற்பனையை ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...