மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆசிரியர் கைது

கோவை கருமத்தம்பட்டியை அடுத்த கோதாபாளையம் பகுதியில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கான பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முருகசாமி என்பவர் இப்பள்ளியை தொடங்கி நடத்தி வந்தார்.

இப்பள்ளியில் சுமார் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். ரம்யா என்ற மாணவி கடந்த 13 ஆண்டுகளாக இப்பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை ரம்யா கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். 

அதில், பள்ளியின் தாளாளர் முருகசாமி தனக்கு மதுவை கொடுத்து கற்பழித்ததாகவும், இதனால், கருவுற்ற தன்னை பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அறங்காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்ததாகவும் கூறினார்.

ரம்யாவுடன் சேர்ந்து, சுமதி என்ற பெண்ணும் முருகசாமி மீது பாலியல் புகார் அளித்தார். இது தொடர்பாக, கருமத்தம்பட்டி போலீசார் முருகசாமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் பள்ளியின் அறங்காவலர் சித்ராதேவி, மேற்பார்வையாளர் ராணி, விடுதி காப்பாளர் பரிமளா, ரேவதி மற்றும் பாபு ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். இதில், ராணி என்பவர் தலைமறைவாகிவிட்ட நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

இன்று சூலூர் தாசில்தார் பழனி முன்னிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவிகளை ஆசிரியர் பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களை கொதிப்படைய செய்துள்ளது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...