வால்பாறையில் கஞ்சா விற்பனை: இரண்டு பேர் கைது, 2.3 கிலோ கஞ்சா பறிமுதல்

வால்பாறையில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். கல்லூரி மாணவர்கள் கைது தொடர்பான விசாரணையில், மேலும் இரண்டு நபர்களிடமிருந்து 2.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: வால்பாறையில் கஞ்சா விற்பனை செய்து வந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 2 கிலோ 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி, வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்த குற்றச்சாட்டில் கல்லூரி மாணவர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், வால்பாறை நல்லகாத்து எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 20 வயது சுபகார்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார்.

சுபகார்த்தியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையிலான குழுவினர் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு சென்றனர். அங்கு, ஏற்கனவே கடந்த ஆண்டு கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது பிசந்தா தந்தா என்பவரை கைது செய்தனர்.



பிசந்தா தந்தாவிடமிருந்து 2 கிலோ 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை வால்பாறைக்கு அழைத்து வந்து வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த நடவடிக்கையில் உதவி ஆய்வாளர் பழனி, தனிப்பிரிவு காவலர் மணிகண்டன் மற்றும் பிற காவலர்கள் ஈடுபட்டனர்.

வால்பாறை பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...