தனியார் சுற்றுலா வாகன ஓட்டிகளால் உள்ளூர்வாசிகள் பாதிக்கப்படுவதாக குன்னூர் சுற்றுலா வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை கால விடுமுறையினை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் நிலகிரி, குன்னூர் பகுதிகளுக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்வர்.

இவ்வாறாக வரும் சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு உட்பட்ட கோத்தகிரி, குன்னூர், உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், காட்சிமுனை, படகுஇல்லம், பூங்கா அகிய பகுதிகளுக்குச் செல்லவும் பெரும்பாலும் அப்பகுதிவாசிகளால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா வாகனங்களையே நாடிச்செல்வர்.

இந்நிலையில், தற்போது பல்வேறு சமவெளிப்பகுதிகளிலும் தனியார் வாகன ஓட்டிகள், உரிமையாளர்கள் சுற்றுலா வாகனங்களை இயக்கி வருவதால் சுற்றுலாப் பயணிகள் உள்ளூர்வாசிகளின் வாகனங்களை நாடுவது குறைந்துவிட்டது.

இதன் மூலம் வருமானம் ஈட்டிவந்த குன்னூர் சுற்றுலா வாகன ஓட்டிகள் வருமானமின்றி பெரிதும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

குன்னூர் மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத் துறையும் குன்னூர் சுற்றுலா வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என குன்னூர் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...