ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் நுரையீரல் உயர் இரத்த அழுத்த கிளினிக் துவக்கம்

கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் பிரத்யேக நுரையீரல் உயர் இரத்த அழுத்த கிளினிக் துவக்க விழா நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்ற பயிலரங்கமும் நடத்தப்பட்டது.


கோவை: ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் பிரத்யேக நுரையீரல் உயர் இரத்த அழுத்த கிளினிக் துவக்க விழா இன்று நடைபெற்றது.

இந்த துவக்க விழாவில், ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி Dr.ரகுபதி வேலுசாமி, நிர்வாக மருத்துவ இயக்குனர் Dr. சந்தோஷ் குமார் டோரா, மருத்துவ இயக்குனர் - (Operations) Dr.சந்தோஷ், இருதயவியல் துறை தலைமை மருத்துவர் Dr.சாம்பசிவம், ஹார்ட் பெயிலியர் கிளினிக் மற்றும் எக்கோ கார்டியாலஜி துறை தலைமை மருத்துவர் Dr. சண்முகசுந்தரம், ஆகியோர் பங்கேற்றனர்.



நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆரம்பகால நோயறிதல் மற்றும் மேம்பட்ட சிகிச்சை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த பிரத்தியேக கிளினிக் துவங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த துவக்க விழாவின்போது, நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் சிகிச்சை உத்திகள் குறித்த மருத்துவத் தொடர் கல்வி (CME) பயிலரங்கம் நடைபெற்றது.

இந்தப் பயிலரங்கில் இருதியவியல், நுரையீரல் சிகிச்சை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் குறித்து விளக்கப்படங்களுடன் விரிவாக எடுத்துரைத்தனர்.



இந்த பயிலரங்கில் 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.



ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் இருதயவியல் துறை தலைமை மருத்துவர் Dr.சாம்பசிவம் கூறுகையில், "நுரையீரல் உயர் ரத்த அழுத்தம் குறித்து மருத்துவர்கள் மத்தியில் சிறந்த புரிதலை ஏற்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் நுரையீரல் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிறந்த முறையில் பயனடையும் வகையில் இந்த கிளினிக் துவங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது, நுரையீரல் உயர் ரத்த அழுத்தத்திற்கான முக்கிய அறிகுறி என்றும் அத்தகைய அறிகுறி தென்படும் போது மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதன் மூலம் குணமடையலாம்" என்றும் அவர் கூறினார்.

இந்த பிரத்தியேக கிளினிக்கை துவங்குவதன் மூலம், நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்திற்கான விரிவான சிகிச்சையை வழங்குவதில் ஜி.கே.என்.எம் மருத்துவமனை முன்னணி பங்கு வகிக்கும் எனலாம்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...