தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மலர்களில் மதிப்பு கூட்டுதல் குறித்த ஒரு நாள் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 9, 2024 அன்று மலர்களில் மதிப்பு கூட்டுதல் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெறுகிறது. பொதுமக்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் மற்றும் மகளிர் பங்கேற்கலாம்.


Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வருகின்ற அக்டோபர் 9, 2024 புதன்கிழமை அன்று "மலர்களில் மதிப்பு கூட்டுதல்" பற்றிய ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த பயிற்சியில் பொதுமக்கள், அறிவியல் மாணவர்கள், புதிய தொழில் முனைவோர்கள் மற்றும் மகளிர் கலந்து கொண்டு பயனடையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம், பல வகைப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட மலர் பொருட்களான பூமாலை, ஜடை பட்டி, நிறமேற்றப்பட்ட மலர்கள், மலர்களைக் கொண்டு செய்யப்படும் கைவினைப் பொருட்கள் போன்றவற்றை குறித்த தொழில்நுட்பங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதாகும்.

பயிற்சி காலை 10.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். பயிற்சிக் கட்டணம் ரூ.1000 ஆகும், இதில் மதிய உணவு மற்றும் தேநீர் அடங்கும். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் அக்டோபர் 8, 2024 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு முனைவர் சு.கார்த்திகேயன் (99654 35081) அல்லது முனைவர் இரா.சித்ரா (99427 66922) ஆகியோரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மலரியல் துறையில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...