டெங்கு காய்ச்சல் பாதிப்பு எங்கும் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்

கோவையில் புதிய சுகாதார நிலையங்கள் திறப்பு. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் தான் டெங்கு இறப்புகள் அதிகம் என்றும் குறிப்பிட்டார்.



கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்புற சமுதாய நல மையத்தினையும், தாளியூரில் ரூ.58.10 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பொது சுகாதார அலகு கட்டடங்களையும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், மொத்தமாக ரூ.2.08 கோடி மதிப்புடைய புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், GKNM தனியார் மருத்துவமனையிலும் புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சுகாதார துறையில் ஏற்கனவே இருக்கின்ற பழைய கட்டிடத்திற்கு கூடுதல் புதிய கட்டிடம் கட்டப்படுகின்றது எனவும், அந்த இடங்களில் புதிய மருத்துவர்கள் நியமிக்க வேண்டியது இல்லை எனவும் கூறியதுடன், மருத்துவதுறையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்தாளுநர்கள் பணியிடங்கள் நியமனம் செய்யப்படுகின்றது எனவும் விரைவில் 2253 மருத்துவர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர், இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது எனவும் தெரிவித்தார்.

1066 சுகாதார ஆய்வாளர் நியமனம் குறித்து 38 பேர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கின்றனர் எனவும், இந்த வழக்கு போட்டவர்களை அழைத்து பேசி வருகின்றோம் எனவும் காலியாக இருந்த 14 மருத்துவ கல்லூரி முதல்வர்கள் பணிநியமனம் நேற்று செய்யப்பட்டு இருக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் எங்கும் மருந்து தட்டிப்பாடு இல்லை ,13 வகையான தடுப்பூசிகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கின்றது எனவும் தெரிவித்தார். சுகாதார துறையில் ஒப்பந்த அடிப்படையில் வரும் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய முடியாது எனவும் Mrb தேர்வுகள் மூலம் உரிய தகுதி அடிப்படையில் முறையாக வந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் கூறிய அவர், அரசு மருத்துவமனைகளில் கிரிஸ்டல் நிறுவனம் மூலம் ஒப்பந்த பணியாளர் பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அது தொடர்பான புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

தொற்று நோய்கள் பரவாமல் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிப்பில்லாத வகையில் இஉக்கும் வகையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வரும் நிலையில் வருகிற 15 ம் தேதிக்கு பின்பு தேவையான இடங்களில் காய்ச்சல் முகாம்கள் அமைத்து காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் எங்கே டெங்கு இருக்கின்றது என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொல்ல வேண்டும் எனவும் டெங்கு இறப்பு அதிமுக ஆட்சியில்தான் அதிகம் எனவும் அதிமுக ஆட்சியில் கடந்த 2012ல் டெங்கு இறப்பு 66 பேர், 2017 ல் 65 பேர் எனவும் சுட்டிக்காட்டிய மா.சுப்பிரமணியன், தமிழக வரலாற்றில் அதிகப்படியான டெங்கு இழப்புகள் இதுதான் எனவும் இந்த ஆண்டில் டெங்கு காரணமாக ஆறு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும் அதுவும் தனியார் மருத்துவமனை முறையான சிகிச்சை இல்லாதது, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதது போன்ற காரணத்தால் உயிரிழப்பு எனவும் குறிப்பிட்டார். டெங்கு பாதிப்பு எங்கேயுமே இல்லை எனவும் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...