விபத்துக்களுக்கு வழி வகுக்கிறதா ‘பஸ்-பே?

கோவையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கோவை மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் முதற்கட்டமாக கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த 7 இடங்களை தேர்வு செய்து போலீசார் அங்கு ‘பஸ்-பே’ அமைத்தனர். நகர பேருந்துகள் பேருந்து நிறுத்தங்களில் தாறுமாறாக நிறுத்தப்படுவதை தடுக்க இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. 

இந்நிலையில், ‘பஸ்-பே’க்களால் விபத்துகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. சாலையில் சென்று கொண்டிருக்கும் நகர பேருந்துகள் திடீரென இடதுபுறம் இருக்கும் ‘பஸ்-பே’ நோக்கி திரும்பும் போது பேருந்தின் பின்புறம் வரும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சிறு சிறு விபத்துகள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

கோவை, ஜி.என்.மில்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘பஸ்-பே’வில் இது போன்ற விபத்துக்கள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. 

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த அமைக்கப்பட ‘பஸ்-பே’க்களால் தற்போது சிறு சிறு விபத்துகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. பொதுமக்கள் சிறிய அளவிலான காயங்கள் அல்லது, வாகனத்தில் கீறல் மட்டும் ஏற்படுவதால் புகார்களை அளிக்க தயங்கி வருகின்றனர். 

இந்த பிரச்சனையில் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தீர்வை கொண்டுவர வேண்டும். ‘பஸ்-பே’ தொடங்குவதற்கு முன் சற்று தொலைவில் இருந்து பேருந்துகள் மட்டும் செல்லுமாறு சிறிய கற்களை வைத்து பாதை அமைத்தால் இந்த விபத்துக்கள் குறைய வாய்ப்புகள் உள்ளது’ என்றனர்.

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...