அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை: கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2024-2025 ஆம் ஆண்டிற்கான இத்திட்டத்தில் தகுதியுடையவர்கள் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக தமிழுக்கு சேவையாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், சிறந்த தமிழ் சேவகர்களுக்கு மருத்துவப்படி ரூ.3,500, உதவித்தொகை ரூ.500 என மொத்தம் ரூ.4,000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை அவர்கள் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். மேலும், அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது.

2024-2025 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தில் பயனடைய 2024-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். மேலும், ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். மகளிர் உரிமைத் தொகை, சமூகநல பாதுகாப்பு உதவித்தொகை போன்ற தமிழ்நாடு அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பிக்க விரும்புவோர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு, தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான இரண்டு பரிந்துரைச் சான்றுகள், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தினை தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பழைய கட்டடம், முதல் தளம், அறை எண் 14-இல் இயங்கி வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...