பத்மஸ்ரீ பாப்பம்மாள் உடலுக்கு அமைச்சர் முத்துசாமி அஞ்சலி - திமுகவிற்கு பேரிழப்பு

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் உடலுக்கு அமைச்சர் முத்துசாமி அஞ்சலி செலுத்தினார். திமுகவின் மூத்த உறுப்பினரான பாப்பம்மாளின் இழப்பு கட்சிக்கு பேரிழப்பு என அமைச்சர் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் வசித்து வந்த பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள், உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் தேக்கம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.



திமுகவின் மூத்த உறுப்பினரான பத்மஸ்ரீ பாப்பம்மாள் அவர்களின் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தமிழக அமைச்சர் முத்துசாமி அவர்கள் இன்று நேரில் வருகை புரிந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் முதலமைச்சர் சார்பிலும், அமைச்சர் பெருமக்கள் சார்பிலும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார். அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, "பாப்பம்மாள் அவர்கள் 1951 ஆண்டு முதல் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்தவர். குறிப்பாக ஹிந்தி திணிப்பு போராட்டத்தில் பெரும்பங்காற்றினார்" என்று நினைவு கூர்ந்தார்.

"பாப்பம்மாளின் இழப்பு திமுகவிற்கு பேரிழப்பு" எனக் கூறிய அமைச்சர், "இந்த பகுதியில் அவர் விட்டுச் சென்ற திமுகவின் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்" என உறுதியளித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...