புழல் சிறையில் இருந்து விடுதலையான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி: முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு

471 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தின் நிபந்தனை ஜாமினில் விடுதலையானார். முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த அவர், தன் மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வதாக உறுதியளித்தார்.


புழல் சிறையில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமினில் விடுதலையானார். 471 நாட்களாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. பிணை உத்தரவாதங்களை ஏற்று செந்தில் பாலாஜியை ஜாமினில் விடுவிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் செந்தில் பாலாஜி பேட்டியளித்தார். அப்போது அவர், "என் மீது அன்பும், நம்பிக்கையும், பாசமும் வைத்திருந்த கழகத் தலைவர் முதலமைச்சருக்கு வாழ்நாள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.

மேலும் அவர், "அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது போடப்பட்ட இந்த பொய் வழக்கில் இருந்து சட்டப் போராட்டம் நடத்தி மீண்டு வருவேன்" என்று உறுதியாகத் தெரிவித்தார். தன் மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொண்டு நீதி பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...