கேரளாவில் நடைபெற்ற கேலோ இந்தியா சைக்கிளிங் போட்டியில் கோவை மாணவி சாதனை

கேரளாவில் நடைபெற்ற கேலோ இந்தியா பெண்கள் சைக்கிளிங் போட்டியில் கோவை மாணவி ஹஷினி நான்கு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இரண்டு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி பதக்கங்களை அவர் வென்றுள்ளார்.


கோவை: கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கர்யாவட்டத்தில் கடந்த 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் கேரளா சைக்கிளிங் அசோசியேஷன் சார்பாக "கேலோ இந்தியா" பெண்களுக்கான சைக்கிளிங் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

பெண்கள் சப் ஜூனியர், பெண்கள் ஜூனியர், பெண்கள் எலைட் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழகம் சார்பாக கோவையைச் சேர்ந்த மாணவி ஹஷினி கலந்து கொண்டார். அவர் கெரின், ஸ்பிரின்ட் ஆகிய பிரிவுகளில் தலா ஒரு தங்கப் பதக்கமும், டைம் டாயல் மற்றும் பர்சியூட் பிரிவுகளில் தலா ஒரு வெள்ளிப் பதக்கமும் என மொத்தம் நான்கு பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.



இந்த வெற்றியுடன் கோவை திரும்பிய ஹஷினியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இளம் வயதிலேயே சர்வதேச அளவிலான போட்டியில் சாதனை படைத்துள்ள ஹஷினியின் வெற்றி, மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த சாதனை மூலம் கோவை மாவட்டத்தின் விளையாட்டுத் துறையின் வளர்ச்சியையும் இது எடுத்துக்காட்டுகிறது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...