உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி: அமைச்சர் செஞ்சி மஸ்தான்

கோவையில் பேரூர் ஆதினத்தை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார். மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்ப்பதாகவும் கூறினார்.



Coimbatore: கோவை பேரூர் ஆதினம் மருதாசல அடிகளாரை நேரில் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், கலைஞரின் 100 ரூபாய் நாணயத்தை வழங்கி ஆசி பெற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பேரூர் ஆதினம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும், செம்மொழி நடத்துவதற்கு உறுதுணையாகவும் இருந்ததாகத் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினின் சார்பாகவும் வாழ்த்து தெரிவித்ததாக கூறிய அமைச்சர், "ஒட்டுமொத்த தமிழ் உணர்வோடு இருக்கக்கூடிய அனைவரையும் ஒருங்கிணைப்பது தான் தமிழர் கலாச்சாரம். தமிழோடு இருக்கக்கூடிய பேரூர் ஆதினம் இருக்க வேண்டும்" என்றார்.



மத்திய அரசு கொண்டு வரும் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஆரம்பம் முதலே எதிர்த்து வருவதாகவும், ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் ஜமாத்தின் ஒருமித்த கருத்தும் இந்த மசோதாவிற்கு எதிராக உள்ளதாகவும் அமைச்சர் கூறினார். "மத நல்லிணக்கத்திற்கு வேற்றுமையில் ஒற்றுமை காணும் வேலையில் மத்திய அரசு இந்த சட்டம் மூலம் ஒற்றுமையில் வேற்றுமையை காண வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. இது கவலை அளிப்பதாக உள்ளது," என்றார்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "கலைஞர் உரிய நேரத்தில் உள்ளாட்சித்துறையையும், துணை முதல்வர் பதவியையும் ஸ்டாலினுக்கு வழங்கினார். உழைப்பு என்றால் அது ஸ்டாலின் தான் என்று கலைஞர் சொன்னார். அதேபோல் உழைப்பிற்கு எடுத்துக்காட்டாக ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் செல்லப்பிள்ளை, கலைஞரின் பேரப்பிள்ளை, மாமன்னன் உதயநிதி ஸ்டாலினும் இன்று தமிழகம் முழுவதும் இளைஞர்களை ஒன்று சேர்த்து கழகத்தை வலுப்படுத்துகிறார். அந்த உழைப்புக்கு ஏற்றவாறு உரிய நேரத்தில் கலைஞரைப் போல ஸ்டாலினும் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுப்பார்," என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...