கோவை சத்தி சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளால் காந்திபுரம் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக கோவை மாநகர காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகர காவல்துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாளை (வெள்ளிக்கிழமை) முதல் காந்திபுரத்தில் இருந்து கணபதி மற்றும் சத்திசாலை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் கிராஸ்கட் ரோடு 11-வது வீதி வழியாக சென்று 100 அடி சாலையை அடைந்து, அங்கிருந்து 2-வது வீதி, ராதா கிருஷ்ணன் சாலை வழியாக சத்தி சாலையை அடையலாம்.
சத்தி சாலையில் இருந்து காந்திபுரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் கணபதி மூர் மார்கெட் சந்திப்பில் ஆவாரம்பாளையம் சந்திப்பு வழியாக சென்று இராமகிருஷ்ணா மருத்துவமனை சந்திப்பு வழியாக செல்லலாம்.
மற்ற இலகு ரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சத்தி சாலை ஆம்னி பேருந்து நிலையம் அருகில் வலதுபுறம் திரும்பி ராஜீ நாயுடு லே அவுட் வழியாக நூறு அடி சாலையை அடைந்து பின்னர் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கோவை மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.