மேட்டுப்பாளையம் அருகே குடியிருப்புக்கு அருகிலுள்ள குட்டையில் முதலையை பிடிக்க வனத்துறை தீவிர முயற்சி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் இரண்டு முதலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. வனத்துறையினர் முதலைகளை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் இரண்டு முதலைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து முதலைகளை பிடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனையடுத்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர் அந்த குட்டையில் உள்ள முதலைகளை பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.



குட்டையில் இரண்டு இடங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடிய நிலையில், அந்த தண்ணீரை பம்ப்செட் மோட்டார்கள் வைத்து வெளியேற்றி முதலைகளை பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பத்துக்கு மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் முதலைகள் தென்பட்டதாக கூறப்படும் குட்டையை சுற்றி கண்காணிப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். முதலைகள் வெளியேறாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தண்ணீரை வெளியேற்றியவுடன் முதலைகளை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...