உக்கடம் மேம்பாலத்திலிருந்து சுங்கம் செல்லும் வழி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

கோவை உக்கடம் மேம்பாலத்திலிருந்து சுங்கம் செல்லும் வழி செப்டம்பர் 11 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் வசதியாக அமைந்துள்ளது.


Coimbatore: கோவை உக்கடம் மேம்பாலத்திலிருந்து சுங்கம் செல்லும் வழி, பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து உக்கடம் நோக்கி மேம்பாலத்தில் வரும் வாகன ஓட்டிகள், சுங்கம் சந்திப்பு செல்வதற்கான வழித்தடம் செப்டம்பர் 11 அன்று பயன்பாட்டுக்கு வந்தது. இனி, சுங்கம் சந்திப்பில் இருந்து செல்வோரும் உக்கடம் மேம்பாலத்தை பயன்படுத்தலாம்.

உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை, ரூ.481.95 கோடி செலவில் மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 9 அன்று முதல்வர் ஸ்டாலின் இப்பாலத்தை பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். அப்போது, சுங்கம் சந்திப்பில் இருந்து வாலாங்குளம் ரோட்டில் வரும் வாகன ஓட்டிகள் மேம்பாலத்தில் செல்வதற்கான ஏறு தளம் மற்றும் ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து வருவோர் இறங்குவதற்கான தளம் அமைக்கப்படாமல் இருந்தது. இப்பணியை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

விபத்துகளைத் தவிர்க்க, தேவையான இடங்களில் சாலை பாதுகாப்பு ஒளிப்பான் ஒட்டவும், அறிவிப்பு பலகை வைக்கவும், மின் விளக்குகள் பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வாகனங்கள் வெள்ளோட்டம் விடப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் இரண்டு மணி நேரம் முகாமிட்டு ஆய்வு செய்தனர். வாகனங்கள் தடங்கலின்றி சீராக சென்றதால், வாலாங்குளம் ரோட்டில் உள்ள ஏறு தளம் மற்றும் இறங்கு தளம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

இனி, சுங்கம் சந்திப்பில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் உக்கடம் மேம்பாலத்தைப் பயன்படுத்தி, ஆத்துப்பாலம் சந்திப்பு வழியாக பொள்ளாச்சி ரோடு அல்லது பாலக்காடு ரோடு செல்லலாம். அதேபோல், ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து வருவோர் சுங்கம் செல்வதற்கு உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள இறங்கு தளம் மூலமாக இறங்கிச் செல்லலாம்.

அடுத்த கட்டமாக, உக்கடம் பஸ் ஸ்டாண்ட் முன்பும், ஆத்துப்பாலம் சந்திப்பிலும் நிரந்தரமாக 'ரவுண்டானா' அமைக்கும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது. மேலும், செடிகள் வளர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...