கவுண்டம்பாளையம் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவையை அடுத்த அன்னூர் கவுண்டம்பாளையம் குடியிருப்பு பகுதியில் புதியதாக மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் அன்னூர்- சிறுமுகை சாலையில் இருந்த டாஸ்மாக் மதுபானக்கடையை, கவுண்டம்பாளையம் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் இடமாற்றம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, குடியிருப்பு பகுதியில் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். ஆனால், புதிதாக மதுபானக்கடை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. 

இதனால் ஆவேசமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆயிரத்தும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மதுபானக்கடை அமைத்தால் பெண்கள் மற்றும் உழைப்பாளி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறிய பொதுமக்கள், அப்பகுதியில் மதுபானக்கடை அமைக்க விடமாட்டோம் என தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...