திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைத்தால் பங்கேற்பது குறித்து பரிசீலிப்போம்: அன்புமணி ராமதாஸ்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு, தேசிய கல்விக் கொள்கை, போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.



கோவை: கோவை விமான நிலையத்தில் செப்டம்பர் 10 அன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்தார்.

தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசிய அவர், "தேசிய கல்வி கொள்கையில் நல்லதும் இருக்கிறது, அதேபோல் மாநிலத்திற்கு பாதகமான அம்சங்களும் உள்ளன. குறிப்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது. ஆனால் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் உள்ளது. எனவே மத்திய அரசு இதைத் திணிக்கக் கூடாது. கல்வி என்பது மாநில பட்டியலுக்கு வர வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

திமுக ஆட்சிக்கு வந்த பின் போதைப் பொருள் விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டிய அன்புமணி, "காவல்துறைக்கு தெரியாமல் இது நடக்காது. நானும் முதல்வரிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால் கடமைக்கு முதல்வர் கூட்டம் நடத்தி கண்துடைப்புக்கு சில நடவடிக்கைகள் எடுப்பதாகவும், நேற்று கூட மூன்று கொலைகள் நடந்துள்ளன. இதற்கு காரணம் போதைப் பொருள்தான். முதல்வர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.

திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு குறித்து கருத்து தெரிவித்த அவர், "10 வருடம் திமுக கூட்டணியில் இருந்து கொண்டு இப்போதாவது மது ஒழிப்பை திருமாவளவன் ஏற்றுக் கொண்டுள்ளார். திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டுக்கு எங்களை அழைக்கட்டும், அதில் கலந்து கொள்வது குறித்து அப்போது பார்க்கலாம்," என்றார்.

மேலும் அவர், "தமிழக அரசு சாராயத்தில் கவனம் செலுத்தாமல் ஏரிகளைப் பாதுகாக்க வேண்டும், தண்ணீரை சேமிக்க நிதி ஒதுக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார். "மாணவர்களுக்கு நீதி போதனை மிகவும் அவசியம். அதில் நல்லது இருக்கிறது. குறிப்பாக சமூக சீர்கேடு விஷயங்கள், எது நல்லது, எது கெட்டது என்பதை மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்," என்றும் தெரிவித்தார்.

விஜய் மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது குறித்த கேள்விக்கு, "யார் மாநாடு நடத்தினாலும் காவல்துறையினர் இவ்வளவு கேள்விகள் கேட்பார்கள். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை," என்று அன்புமணி ராமதாஸ் பதிலளித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...