முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கோவையில் தொடக்கம்

கோவை நேரு விளையாட்டு அரங்கம் அருகிலுள்ள மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பதி போட்டிகளை தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை நேரு விளையாட்டு அரங்கம் அருகிலுள்ள மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் இப்போட்டிகள், கோவையில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியாக துவங்கியது.



இப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று தொடங்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 39,738 பேர் இப்போட்டிகளுக்கு இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இதில் அரசு ஊழியர்கள் 1,449, கல்லூரி மாணவர்கள் 16,809, பள்ளி மாணவர்கள் 18,679, பொதுப்பிரிவினர் 2,167, மாற்றுத்திறனாளிகள் (ஆண்கள்) 654 பேர் அடங்குவர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேரு விளையாட்டு அரங்கம், மாநகராட்சி மைதானம், ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி, குமரகுரு தொழில்நூட்ப கல்லூரி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கற்பகம் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், தியாகி இராமசாமி நினைவு பள்ளி, இராமகிருஷ்ணா வித்யாலாயா பள்ளி ஆகிய 9 இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் அணிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும். தனி விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடம் பெறுபவர்களும் மாநில போட்டிக்கு செல்வர். மாநில அளவிலான போட்டியில் முதல் இடத்திற்கு ரூ.1,00,000, இரண்டாம் இடத்திற்கு ரூ.75,000, மூன்றாம் இடத்திற்கு ரூ.50,000 வழங்கப்படும். மொத்த பரிசுத் தொகை 37 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...