'பிரேமம்' திரைப்பட புகழ் நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணனும் திரைபட துறையில் களமிறங்குகிறார்.


பிரேமம் திரைப்பட புகழ் நடிகை சாய்பல்லவியின்  தங்கை பூஜா கண்ணனும் திரைபட துறையில் களமிறங்குகிறார்.மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி,படத்தின் வெற்றி மற்றும் அவரது நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாய் மலையாளத்தில் திரைபடங்களில் பிசியாக உள்ளார். மலையாளத்தில் தமிழ் பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்த சாய் பல்லவி, இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் கோலிவுட்டில் களமிறங்க உள்ளார். இதன் முன்னோட்டமாக பூஜா கண்ணன் நாயகியாக நடித்த கரா என்ற குறும்படம் இன்று யுடியுப்பில் வெளியிடப்பட்டது. 

கோவை காந்திபார்க் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்ட இந்த குறும்படத்தை பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பார்த்தனர்.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பூஜா கண்ணன்,கோவையில்  தனியார் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படித்து வருவதாகவும் அக்கா சாய் பல்லவி சினிமா துறையில் இருப்பதை தொடர்ந்து தனக்கும் பட வாய்ப்புகள் வருவதாக கூறியவர் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் திரைப்படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறிய பூஜா கண்ணன், நல்ல கதையுடன் கூடிய பட வாய்ப்புகள் வந்தால் தற்போதே படங்களில் நடிக்க ரெடியாக இருப்பதாக தெரிவித்தார்.கோவையை சேர்ந்த இளைஞர்கள் உருவாக்கியுள்ள இந்த கரா குறும்படத்தை, ஆஜித் என்ற இளைஞர் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...