கேரள ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக பகுதியாக ரத்து; மாற்றுப் பாதையில் இயக்கம்

சேலம் ரயில் கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளன. செப்டம்பர் 6 அன்று பல ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டு, சில நிலையங்களை தவிர்த்து இயக்கப்படும்.


Coimbatore: சேலம் ரயில் கோட்டத்துக்கு உள்பட்ட பல இடங்களில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக பாலக்காடு கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாலக்காடு - கோவை மெமு ரயில் (எண்: 06806) செப்டம்பர் 6-ஆம் தேதி பாலக்காடு - போத்தனூர் இடையே மட்டும் இயக்கப்படும். இந்த ரயில் கோவை ரயில் நிலையம் செல்வது தவிர்க்கப்படும்.

கோவை - ஷொரணூர் மெமு ரயில் (எண்: 06805) கோவை - போத்தனூர் இடையே செப்டம்பர் 6-ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் போத்தனூர் - ஷொரணூர் இடையே மட்டும் இயக்கப்படும்.

ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்:13352) மற்றும் எர்ணாகுளம் - பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678) ஆகியவை செப்டம்பர் 6-ஆம் தேதி போத்தனூர், இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில்கள் கோவை ரயில் நிலையம் செல்வது தவிர்க்கப்படும். போத்தனூர் கூடுதல் நிறுத்தமாகச் செயல்படும்.

ஈரோடு - பாலக்காடு மெமு ரயில் (எண்: 06819) செப்டம்பர் 6-ஆம் தேதி போத்தனூர், இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், இந்த ரயில் சிங்காநல்லூர், பீளமேடு, வடகோவை, கோவை ரயில் நிலையங்களுக்கு செல்வது தவிர்க்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...