அன்னூர் சார் பதிவாளரை கேள்விகளால் துளைத்தெடுத்த விவசாயி..!

கோவை அன்னூரில் சிட்கோ தொழில்பேட்டைக்காக நில கையகப்படுத்துதல் எதிர்ப்பு போராட்டத்தில், பத்திரப் பதிவு தடை குறித்து சார் பதிவாளரை கேள்விகளால் துளைத்தெடுத்த விவசாயி குமார ரவிக்குமார் வீடியோ வைரலானது.


Coimbatore: கோவை மாவட்டம் அன்னூரில், சிட்கோ தொழில்பேட்டை அமைப்பதற்காக 3600 ஏக்கர் நிலம் கையகப்படுத்த கடந்த 2022 ஆம் ஆண்டு அரசு திட்டமிட்டது. இதனை அறிந்த விவசாயிகள், விளை நிலங்களை கைப்பற்றக் கூடாது என அன்னூர், குப்பனூர், வடக்கனூர், புகலூர் உள்ளிட்ட ஆறு கிராம மக்கள், 'நமது நிலம் நமது' என்ற சங்கத்தை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சிட்கோ தொழில்பேட்டைக்காக, விவசாய நிலம் கையகப்படுத்தப்படாது என அரசு உறுதிமொழி அளித்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக, அன்னூர் பத்திரப்பதிவு அலுவலக பதிவாளர் செல்வ பாலமுருகன், இந்த ஆறு கிராமங்களில் பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.



இதனால் நிலங்களை விற்க முடியாமலும், வாங்க முடியாமலும் பல விவசாயிகள் அவதிப்பட்டனர். ஏக்கர் ஒன்றுக்கு 1 கோடிக்கு விலை போன நிலத்தின் மதிப்பு 25 லட்ச ரூபாய் வரை விலை மலிந்து போனது.

'நமது நிலம் நமதே' விவசாய சங்க தலைவர் குமார ரவிக்குமார் தலைமையில், கடந்த திங்கட்கிழமை அன்று, அன்னூர் பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் முன்பாக விவசாயிகள் ஒன்று கூடி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அப்போது பொறுப்பற்ற முறையில் பதில் கூறிய பத்திர பதிவாளர் செல்வ பால முருகனின் பொறுப்பை உணர்த்தும் வகையில், நமது நிலம் நமதே சங்கத் தலைவர் குமார ரவிக்குமார் வார்த்தைகளால் வறுத்தெடுத்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சட்டப்படி செய்ய வேண்டியது, நீதிமன்றம் நாடுவது, காவல்துறை பாதுகாப்பு, பத்திர பதிவாளர் என்ற முறையில் அவரின் கடமை என்ன, என்பது குறித்து சினிமா பட பாணியில் குமார ரவிக்குமார் பேசியது துளி அளவும் மறுக்க முடியாததாக இருந்தது.

இதனை அங்கு கூடிய விவசாயிகள் அனைவரும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர். இறுதியாக பத்திரப்பதிவு செய்வதற்கு இதுவரை தடை ஏதும் இல்லை. தாராளமாக செய்யலாம் என அன்னூர் பதிவு அலுவலக பதிவாளர் செல்வ பாலமுருகன் தெரிவித்ததை தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அரசு அறிவிப்பு இன்றி தன்னிச்சையாக பதிவாளர் செயல்பட்டதாகவும், இதனால் விளை நிலங்களின் விலை, மிகக் கடுமையான வீழ்ச்சி அடைந்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...