தரம் பிரிக்காத குப்பைகளை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டக்கூடாது என பசுமை தீர்ப்பாயம் உத்தரவு


வெள்ளலூர் குப்பை கிடங்கில் தரம் பிரிக்காமல் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளினால் பல்வேறு தீமைகள் ஏற்பட்டு வருகின்றன என பசுமைத் தீர்ப்பாயத்தில் மதிமுக கோவை மாவட்ட இளைஞரணி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்திற்கு வந்த நிலையில், இதுகுறித்து நீதிபதி பி.ஜோதிமணி மற்றும் எக்ஸ்பெர்ட் மெம்பர் பி.எஸ்.ராவ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நீர் மாதிரி சோதனை முடிவுகளும், நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது குறித்தான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், குப்பை கிடங்கில் பல ஆண்டுகளாக தரம் பிரிக்காமல் கொட்டப்பட்டு கிடக்கின்ற 19 லட்சம் டன் குப்பைகள் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் மதிமுக இளைஞரணி சார்பில் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, பி.எஸ்.ராவ் உடன் ஆலோசனை மேற்கொண்ட நீதிபதி பி.ஜோதிமணி, தரம் பிரிக்காமல் கொட்டப்பட்டிருக்கும் 19 லட்சம் டன் குப்பைகளை மூட உடனடியாக காலநிர்ணயத்துடன் அறிக்கை சமர்பிக்க வேண்டும்.  தினமும் சேகரமாகும் 1000 டன் குப்பையை கையாள பிரித்தெடுக்கும் திட்டத்தையும் அதை எப்போது நிறைவேற்றுவோம் என்பதற்கான அறிக்கையும் சமர்பிக்கப்பட வேண்டும். உடனடியாக மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் 100 சதவிகிதம் கழிவுகளை பிரித்தெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தரம் பிரிக்காத குப்பைகளை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டக்கூடாது. பழைய குப்பைகளுடன் புதிய குப்பைகளை கலக்கக்கூடாது என உத்தரவு பிரப்பித்தார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...