கோவையில் செவிலியரை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை


கோவையில் செவிலியரை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஒத்தகால்மண்டபம் மாசிகவுடன்பதி பகுதியைச் சேர்ந்தவர் பிராகாஷ் (28). இவரது மனைவி சத்யபாமா. பிரகாஷ் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

இதனிடையே, அதேப் பகுதியைச் சேர்ந்த செவிலியரான ஜகதாம்பாள் என்பவருடன் பிரகாஷ்-க்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, தன்னை திருமணம் செய்துகொள்ளும் படி பிரகாஷை ஜகதாம்பாள் வற்புறுத்தியதைத் தொடர்ந்து கடந்த 2013-ஆம் ஆண்டு ஜகதாம்பாளை பிராகாஷ் தனது நண்பர் ரூபேஷ் என்பவருடன் இணைந்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு டவுன் காவல்துறையினர் பிரகாஷ், அவரது மனைவி சத்யபாமா, பிராகாஷின் நண்பர் ரூபேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து, இன்று கோவை மகிளா நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் வழக்கில் சேர்க்கப்பட்ட பிராகாஷின் மனைவி சத்யபாமா மற்றும் நண்பர் ரூபேஷ் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். பிராகாஷுக்கு ஆயுள் தண்டனையும்,  5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...