உடுமலை வனப்பகுதியில் அனுமதியின்றி நுழைந்த 12 பேருக்கு ரூ.2.40 லட்சம் அபராதம்

உடுமலை வனப்பகுதியில் முறையான அனுமதியின்றி நுழைந்த 12 பேருக்கு வனத்துறை அதிகாரிகள் ரூ.2.40 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். மலைவாழ் மக்கள் அழைத்துச் சென்றதாக விசாரணையில் தெரிய வந்தது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகேயுள்ள ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் கள்ளச்சாராயப் பிரச்சினை தொடர்ந்து நிலவி வருவதால், காட்டுப்பட்டி, மாவடப்பு, குழிப்பட்டி மற்றும் குருமலை குடியிருப்பு பகுதிகளில் வனத்துறையினர் தொடர் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன், மாவடப்பு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வனப்பகுதியைச் சுற்றிப் பார்க்க வந்த சென்னையைச் சேர்ந்த நான்கு பேரும், திருமூர்த்திமலை இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மூன்று பேரும் வனத்துறையின் முன் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் ஏழு பேருக்கும் தலா ரூ.20,000 வீதம் மொத்தம் ரூ.1,40,000 அபராதம் விதிக்கப்பட்டது.



இதேபோல், அதே பகுதிக்கு மாடுகள் வாங்கச் சென்ற உடுமலை தாலுகா ராவணாபுரம் மற்றும் தேவனூர்புதூரைச் சேர்ந்த ஐந்து பேரும் வனத்துறை அனுமதியின்றி சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது தெரியவந்தது. இவர்களுக்கும் தலா ரூ.20,000 வீதம் மொத்தம் ரூ.1,00,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மொத்தம் 12 நபர்களுக்கு ரூ.2,40,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் மாவடப்பு மற்றும் காட்டுப்பட்டி குடியிருப்பைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் அழைத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மலைவாழ் குடியிருப்புகளுக்கு வனத்துறையின் முன் அனுமதியின்றி வெளிநபர்களை அழைத்துச் செல்லக்கூடாது என்றும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உடுமலை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...