பொள்ளாச்சி அருகே திடீர் சூறாவளி: சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

பொள்ளாச்சி அருகே ஆழியார் பகுதியில் திடீர் சூறாவளி காற்று வீசியது. மரங்கள் விழுந்ததால் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வீடுகள் மற்றும் வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டது.



கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் சூறாவளி காற்று வீசியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக சூறாவளி காற்று வீசி வருகிறது. இந்நிலையில், இன்று காலை பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென பலத்த சூறாவளி காற்று வீச தொடங்கியது.

இதன் காரணமாக, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றன. பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.



ஆழியார் பூங்கா அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரின் மீது மரம் விழுந்ததால், அந்த கார் முழுவதும் சேதமடைந்தது.



இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஒரு மிகப்பெரிய ராட்சத மரம் விழுந்ததில் நான்கு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து சூறாவளி காற்று வீசி வருவதால், வழக்கமாக பரபரப்பாக காணப்படும் ஆழியார்-வால்பாறை சாலை தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. சாலை முழுவதும் விழுந்த மரங்களும் மரக்கிளைகளும் சிதறிக் கிடக்கின்றன.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...