எஞ்சின் பழுது காரணமாக இன்று உதகை மலை ரயில் சேவை ரத்து

உதகை மலை ரயில் என்ஜின் நேற்று (ஏப்ரல் 25) பழுதடைந்ததைத் தொடர்ந்து இன்று உதகை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு மலை ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. அடர்ந்த வனப்பகுதியின் வழியாக மலை ரயில் செல்லும் ரம்மியமான அனுபவங்களைப் பெற தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவர்.

மேலும், தற்போது கோடை விடுமுறையினை முன்னிட்ட நாளொன்றுக்கு ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரி, குன்னூர், உதகை உள்ளிட்ட பகுதிகளில் குவிந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் விரும்புவதும் நீலகிரி மலை ரயில் பயணமே.

இந்நிலையில், நேற்று காலை 282 பயணிகளுடன் மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் ரயில், ஆர்டலி அருகே சென்றுகொண்டிருந்த போது எஞ்சின் உந்து சக்தி குறைவால் ரயில் மலைப்பாதையில் நடுவழியில் பழுதாகி நின்றது. 

இதனைத்தொடர்ந்து, குன்னூரில் இருந்து மாற்று என்ஜின் கொண்டுவரப்பட்டு மலை ரயில் மீண்டும் இயக்கப்பட்டு கல்லாரில் நிறுத்தப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, ரயில்வேத்துறை ஊழியர்கள் ரயில் எஞ்சினில் ஏற்பட்டுள்ள பழுதினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் இன்று (ஏப்ரல் 26) மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், உதகை மலை ரயிலில் பயணம் மேற்கொண்டு மகிழவிருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...