கோவை மாநகரத்தில் சீராக குடிநீர் விநியோகம் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் மாநகராட்சிப் பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (ஏப்ரல் 25) நடைபெற்றது.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் மாநகராட்சிப் பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடிநீர் ஆதாரங்களாக பில்லூர் அணை, பவானி ஆற்று நீர், ஆழியார் ஆற்று நீர், சிறுவாணி அணை ஆகிய நீர் ஆதாரமாக கொண்ட குடிநீர் திட்டங்கள் மூலமாக பெறப்படும் குடிநீரைக் கொண்டு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்யப்படும் ஒரு சில இடங்களில் 10 நாட்களுக்கு மேல் ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கண்டறியப்பட்டது, இதை நிவர்த்தி செய்யும் பொருட்டு அப்பகுதிகளுக்கு 10 நாட்களுக்குள் ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய மாநகராட்சி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், பொது மக்கள் அவசரம் மற்றும் அவசியத்தை கருத்தில் கொண்டு குடிநீர் தேவைப்பட்டால் குடிநீர் லாரிகள் மூலம் உடனடியாக விநியோகம் செய்யவும் மாநகராட்சிப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக, குடிநீர் தரத்தை அவ்வப்போது தரப்பரிசோதனை செய்து குடிநீர் விநியோகம் செய்யுமாறும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கும் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், குடிநீர் குழாய்களில் பழுது ஏற்பட்டால் உடனுக்குடன் பழுதினை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறும் மற்றும் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டால் உடனடியாக குடிநீர் இணைப்புகளை துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்குமாறும் பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகவே, பொது மக்கள் குடிநீரை வீணாக்காமல் மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றம் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் மதியழகன், மாநகரப் பொறியாளர் (பொ) பார்வதி, செயற்பொறியாளர் ஞானவேல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஆலோசகர் சம்பத்குமார், செயற்பொறியாளர்கள் சுகுமார், ரவிச்சந்திரன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோக பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...