தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. துணைவேந்தர் கௌரவ கர்னல் முனைவர் வெ. கீதாலட்சுமி தேசியக்கொடியேற்றி உரையாற்றினார். பல்கலைக்கழகத்தின் சாதனைகள் சிறப்பிக்கப்பட்டன.


Coimbatore: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 78வது சுதந்திர தின விழா 15.08.2024 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.





பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரவ கர்னல் முனைவர் வெ. கீதாலட்சுமி தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தி, சுதந்திர தின விழா உரையாற்றினார்.

துணைவேந்தர் தனது உரையில், சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்தார். 78வது சுதந்திர தினத்தின் "விக்சித் பாரத்" என்ற முழக்கத்தை வலியுறுத்தி, அது பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை குறிக்கும் என்றார்.



கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 929 பயிர் வகைகள், 1500 தொழில்நுட்பங்கள், 150 இயந்திரங்களை உருவாக்கி, இந்தியாவின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கு பங்களித்துள்ளதாக துணைவேந்தர் பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்த ஆண்டு மட்டும் 24 புதிய பயிர் வகைகள், 7 பண்ணை தொழில்நுட்பங்கள், 5 பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகத்தை இந்தியாவின் முதன்மை நிறுவனமாக உயர்த்த ஆசிரியர்களும் மாணவர்களும் உறுதியேற்க வேண்டும் என்று துணைவேந்தர் அழைப்பு விடுத்தார்.



விழாவில் பல்கலைக்கழக அதிகாரிகள், துறைத் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் கலந்து கொண்டனர். தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை மாணவர் நல மைய முதன்மையர் முனைவர் நா. மரகதம் மேற்கொண்டார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...