உடுமலை மாணவி இரண்டாவது முறையாக தேசிய துப்பாக்கி சூடும் போட்டியில் தங்கம் வென்று சாதனை

திருப்பூர் மாவட்டம் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி மாணவி பிரீத்தி, தேசிய அளவிலான துப்பாக்கி சூடும் போட்டியில் இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் 296 மாணவர்கள் பங்கேற்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி மாணவி பிரீத்தி, தேசிய அளவில் நடைபெற்ற துப்பாக்கி சூடும் போட்டியில் இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பிரீத்தி கடந்த ஆண்டு மார்ச் 2023-ல் துப்பாக்கி சுடும் பயிற்சியைத் தொடங்கினார். முதலில் மாநில அளவிலான தேசிய மாணவர் படைக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றார். பின்னர் 5TN Girls Battalion NCC அலுவலகத்தின் மூலம் தொடர் பயிற்சி மேற்கொண்டார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அதைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தின் மௌலங்கரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

கடந்த மாதம் திருச்சி NIT கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் மீண்டும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் தேசிய அளவில் 296 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

இச்சாதனைக்காக உடற்கல்வித்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு தேசிய மாணவர் படை தலைவர் ஆகியோர் பிரீத்தியை சென்னைக்கு அழைத்து பாராட்டினர். இதைத் தொடர்ந்து, மாணவியை கௌரவிக்கும் விதமாக கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.



இவ்விழாவில் 5TN Girls Battalion Commanding Officer J.M ஜோஷி கலந்துகொண்டு மாணவி பிரீத்தியையும், தேசிய மாணவர் படை அலுவலர் கேப்டன் முனைவர் கற்பகவள்ளியையும் பாராட்டினார். கல்லூரி நிர்வாக இயக்குனர் முனைவர் மஞ்சுளா, கல்லூரி முதல்வர் முனைவர் பரமேஸ்வரி ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் வரலாற்று துறை இணை பேராசிரியரும் தேசிய மாணவர் படை அலுவலருமான கேப்டன் முனைவர் கற்பகவள்ளி மேற்கொண்டார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...