உடுமலை அமராவதி அணைக்கு 20,000 கன அடி நீர்வரத்து: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை அமராவதி அணைக்கு நள்ளிரவில் 20,000 கன அடி நீர்வரத்து காரணமாக, பிரதான மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நள்ளிரவில் திடீரென 20,000 கன அடி நீர்வரத்து ஏற்பட்டதால், அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பிரதான மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, துவானம், மறையூர், காந்தூலூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் நீர்வரத்து குறைந்திருந்தது. ஆனால், நேற்று இரவு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக, நள்ளிரவு 1:30 மணியளவில் அணைக்கு திடீரென 20,000 கன அடி நீர்வரத்து ஏற்பட்டது.



இதனால், கரையோர கிராமங்களான கல்லாபுரம், ருத்ராளையம், கொழுமம், மடத்துக்குளம், காரத்தொழுவு, கணியூர் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது அமராவதி அணையின் நீர்மட்டம் 88.09 அடியாக உள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி, வினாடிக்கு 2,576 கன அடி நீர் உள்வரத்தும், 3,386 கன அடி நீர் வெளியேற்றமும் உள்ளது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுழற்சி முறையில் அணைப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கரையோர மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...