பொள்ளாச்சியில் கடன் பிரச்சினையால் காண்ட்ராக்டர் தற்கொலை: வீடியோ பதிவு செய்து உறவினர்களுக்கு அனுப்பி அதிர்ச்சி

பொள்ளாச்சியில் கடன் கொடுத்தவர்கள் திருப்பி தராததால் மனமுடைந்த காண்ட்ராக்டர் வீடியோ பதிவு செய்து உறவினர்களுக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த கெங்கம்பாளையத்தைச் சேர்ந்த 45 வயதான காண்ட்ராக்டர் சக்தி குமார், தான் கொடுத்த கடனை திருப்பித் தராததால் வீடியோ பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சக்தி குமாருக்கு திருமணமாகி ஒரு மகனும் மகளும் உள்ளனர். அவர் சமத்தூரைச் சேர்ந்த கணேசமூர்த்திக்கு ரூ.2.50 லட்சமும், கருப்பம்பாளையத்தைச் சேர்ந்த சாதிக் பாஷாவுக்கு ரூ.1.80 லட்சமும், ஆவல் சின்னாம்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்நாதனுக்கு ரூ.8 லட்சமும் கடனாகக் கொடுத்திருந்தார். இந்தப் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது மூவரும் கொடுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சக்தி குமார், தனது மரணத்திற்கு தன்னிடம் கடன் வாங்கி திருப்பித் தராத மூவரும்தான் காரணம் எனக் கூறி செல்போனில் வீடியோ பதிவு செய்தார். அந்த வீடியோவை வாட்ஸ்அப் மூலம் தனது உறவினர்களுக்கு அனுப்பிவிட்டு, ஜமீன் கோட்டான்பட்டி ராமர் கோயில் வீதியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த கோட்டூர் காவல் நிலைய போலீசார், சக்தி குமாரின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...