கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை மூட்டுகள் வழங்கும் முகாம்: ஆயிரக்கணக்கானோர் பயனடைந்தனர்

கோவையில் நடைபெற்ற இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாமில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பு இம்முகாமை நடத்தியது.


Coimbatore: கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக செயற்கை மூட்டுகள் வழங்கும் மாபெரும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

இராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பு இந்தியா மட்டுமின்றி ஆப்பிரிக்க நாடுகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் மற்றும் கைகளை இலவசமாக பொருத்தும் முகாம்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், கோவையில் கடந்த ஏப்ரல் மாதம் முகாம் நடத்தி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை மூட்டு மற்றும் காலிபர்களுக்கான அளவீடுகள் எடுக்கப்பட்டன.



இதனைத் தொடர்ந்து, அளவீடுகள் எடுக்கப்பட்ட செயற்கை மூட்டுகளை பயனாளிகளுக்கு மருத்துவக் குழுவினர் உதவியுடன் பொருத்துவதற்கான முகாம் கோவையில் நடைபெற்றது. இந்த முகாமில் கோவை, ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினர்களுக்காக தனித்தனியே அரங்குகள் அமைக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்களைப் பொருத்தி செயல்படுவதற்கான பயிற்சிகளை அளித்தனர். சுயமாக நடக்க முடியாமல் உதவியாளர்களுடன் வந்த மாற்றுத்திறனாளிகள் இலவசமாக செயற்கை மூட்டுக்களைப் பொருத்தி தானாக நடந்து சென்றதைக் கண்ட உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...