கோவை பேரூர் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா: குவிந்த பக்தர்கள்

கோவை பேரூர் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3 அன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நொய்யல் ஆற்றங்கரையில் நேர்த்திக்கடன் செலுத்தினர். பாதுகாப்பு காரணங்களுக்காக ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3 அன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நொய்யல் ஆற்றங்கரையில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.

ஆடிப்பெருக்கு விழா ஆற்றங்கரைகளில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விவசாயிகள் உழவுப் பணிகளை கடவுளை வழிபட்டு தொடங்குவர். நாடு செழிக்க தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நதியை தெய்வமாகப் போற்றி வழிபடுகின்றனர்.

இந்நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது நம் முன்னோர்களின் ஐதீகம். ஆடிப்பெருக்கு நகை வாங்கவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் இல்லத்திலும் ஆற்றங்கரைகளிலும் கன்னி தெய்வங்களுக்கு வழிபாடு செய்வது வழக்கம்.

ஏராளமான பொதுமக்கள் தொடர்ந்து வருகை புரிந்து வருவதால், காவல்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மழையின் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து எப்போது வேண்டுமானாலும் அதிகமாகலாம் என்பதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...