ஆடிப்பெருக்கு: பவானி, ஆழியாறு, நொய்யல் ஆறுகளுக்கு செல்ல வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

ஆடிப்பெருக்கு திருநாளையொட்டி, தொடர் மழையால் நீரோட்டம் அதிகரித்துள்ள கோவை மாவட்டத்தின் பவானி, ஆழியாறு, நொய்யல் ஆறுகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, வால்பாறை, நீலகிரி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது கனமழையும் பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

மழையின் காரணத்தினால் நொய்யல், பவானி உள்ளிட்ட ஆறுகளில் நீரோட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவ்வாறான இடங்களுக்கு செல்ல வேண்டாம் என ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நாளை (ஆகஸ்ட் 3) நடைபெறவுள்ள ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு பல்வேறு பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு செல்வது வழக்கம் என்றும் ஆட்சியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் தற்பொழுது பெய்து வரும் மழையின் காரணமாக ஆறுகளில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால், கோவை மாவட்டத்தில் செல்லும் பவானி, நொய்யல், ஆழியாறு உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வலியுறுத்தியுள்ளார். மேலும், மக்கள் தங்களது உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...