இன்று உலக புவி தினத்தினை முன்னிட்டு கோவை பசுமை தேசம் சார்பில் மரக்கன்று நடும் விழா கொண்டாட்டப்பட்டது.

கோவையில் செயல்பட்டு வரும் தினமலர் பத்திரிகை அலுவலகம் முன்பு நடைபெற்ற மரம் நடும் நிகழ்வில் சுமார் 6 அடி உயரமுள்ள இரண்டு வேப்பமரங்கள் நடவு செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் பங்கேற்ற பசுமைதேசம் நிறுவனர் ராஜேந்தர் கூறுகையில், உலக புவி தினத்தை முன்னிட்டு புவியினையும், உயிரினங்களையும் பாதுகாத்திடும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

அதன்படி, இவ்வான்று மதுக்கரை சாலை, சுந்தராபுரத்தில் செயல்பட்டு வரும் தினமலர் பத்திரிகை அலுவலகம் முன்பு இரண்டு வேப்ப மரக்கன்று நடப்பட்டது. இவை 6 அடி உயரம் கொண்டவை. ஏனெனில், வெயில் காலத்தில் சிறியளவிலான மரக்கன்றுகளை நட்டினால் அவை போதிய நீரின்மையாலும், வெப்பத்தினாலும் வாடிவிடும். எனவே தான் வளச்சியடைந்த வேப்பமரக் கன்று நடப்பட்டுள்ளது" என்றார்.

இந்நிகழ்வின் போது, பசுமை தேசம் உறுப்பினர்கள், அப்பகுதி பொதுமக்கள், சிறுவர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.