கோவை மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்த சஹாரா சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம்: 200 கோடி மதிப்புள்ள 10.5 ஏக்கர் நிலம் மீட்பு

கோவை சரவணம்பட்டியில் சஹாரா சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் மாநகராட்சிக்கு சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தது கண்டுபிடிப்பு. 200 கோடி மதிப்புள்ள நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.


Coimbatore: கோவை மாநகராட்சிக்கு சொந்தமான 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்த தனியார் நிறுவனத்திடமிருந்து மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் சஹாரா சிட்டி டெவலப்பர்ஸ் என்ற தனியார் நிறுவனம் வீட்டுமனைகளை அமைத்துள்ளது. 2009ஆம் ஆண்டு பேரூராட்சியாக இருந்த காலத்தில், 109 ஏக்கர் பரப்பளவில் வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டன. இதில் ஓபன் ஸ்பேஸ் ரிசர்வ் (OSR) என்ற வகையில் 10.5 ஏக்கர் நிலம் மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது.



பின்னர் இப்பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, நான்காவது வார்டாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சரவணம்பட்டி பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட நிலத்தை சஹாரா சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் ஆக்கிரமித்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் மற்றும் 4வது வார்டு மாமன்ற உறுப்பினர் கதிர்வேலுசாமி ஆகியோர் முறைகேடான ஆக்கிரமிப்பு தொடர்பான ஆவணங்களை சேகரித்து உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.



அதன் அடிப்படையில், சஹாரா சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் ஆக்கிரமித்திருந்த 200 கோடி ரூபாய் மதிப்புள்ள 10.5 ஏக்கர் நிலம் இன்று மீட்கப்பட்டது. நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த உடைமைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி வடக்கு மண்டல உதவி நகர அமைப்பு அலுவலர் சத்தியா உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...