கோவை செல்வபுரத்தில் வியாபாரியை தாக்கி பணம் பறித்த மூவர் கைது

கோவை செல்வபுரத்தில் தள்ளுவண்டி வியாபாரி முகமது கரீமை கத்தி முனையில் மிரட்டி தாக்கி ரூ.500 பறித்த மூன்று நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சம்பவம் ஜூலை 27 அன்று நடந்தது.


Coimbatore: கோவை செல்வபுரம் பகுதியில் தள்ளுவண்டியில் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் வியாபாரியை தாக்கி பணம் பறித்த மூன்று நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

செல்வபுரம் பேரூர் மெயின் ரோட்டை சேர்ந்த முகமது கரீம் (55) என்பவர் தள்ளுவண்டியில் தின்பண்டங்கள் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஜூலை 27 அன்று செல்வபுரம் இந்திராநகர் செல்வ விநாயகர் கோயில் அருகே வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மூன்று நபர்கள் அவரிடம் ரூ.1000 கேட்டு கத்தி முனையில் மிரட்டினர்.

முகமது கரீம் பணம் கொடுக்க மறுத்ததால், அந்த மூவரும் ஆத்திரமடைந்து தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்கினர். பின்னர் அவரிடமிருந்த ரூ.500-ஐ பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து முகமது கரீம் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தெலுங்குபாளையம் உடையார் தெருவை சேர்ந்த கார்த்திகை செல்வம் (27), செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த அர்ஜூன் (23), கல்லா மேடு தெற்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த பிரகாஷ் (24) ஆகியோர் என கண்டறிந்தனர்.

இதையடுத்து, மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கத்தி மற்றும் மூன்று செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...