மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கோவையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கில் பங்கேற்பு

கோவையில் நடைபெற்ற 'மத்திய பிரதேசத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள்' கருத்தரங்கில் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் பங்கேற்று, தொழில்துறையினருக்கு முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.


Coimbatore: மத்திய பிரதேசம் மாநிலத்தில் தொழில் துவங்க அழைப்புவிடுக்கும் வகையில் அம்மாநிலத்தின் தொழில்துறை சார்பில் 'மத்திய பிரதேசத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள்' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் கோவை, நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மற்றும் அரசு துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தொழில்துறையினருக்கு வழங்கப்படும் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் மாணியங்கள் குறித்து எடுத்துரைத்ததோடு, மத்திய பிரதேசத்தில் தொழில் துவங்க வருமாறு அழைப்பும் விடுத்தனர்.



கருத்தரங்கில் தொழில் துறையினருக்கான வாய்ப்புகள், அவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள், அரசு உதவிகள் உள்ளிட்ட தொழில் துறையினரின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. கோவை, திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜவுளி மற்றும் பின்னலாடை தொழில், இன்ஜினியரிங், ஆட்டோமொபைல்ஸ், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், தகவல் தொழில்நுட்பத்துறை பிரதிநிதிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

முதல்வர் மோகன் யாதவ் தனது சிறப்புரையில், "எல்லோருக்கும் வணக்கம்" என தமிழில் தொடங்கி, தமிழகத்திற்கும் மத்திய பிரதேசத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை சுட்டிக்காட்டினார். கோவை மற்றும் திருப்பூரின் ஜவுளித்துறை சிறப்பை பாராட்டிய அவர், மத்திய பிரதேசத்தின் பருத்தி உற்பத்தி மற்றும் ஜவுளித் தொழில் வளர்ச்சியை எடுத்துரைத்தார்.



PLI திட்டம் மற்றும் PM Mitra ஜவுளி பூங்கா ஆகியவற்றின் மூலம் மத்திய பிரதேசத்தின் ஜவுளித்துறை வளர்ச்சி அடைந்து வருவதாகவும், புதிய தொழில் விதிமுறைகள் மற்றும் மானியங்கள் மூலம் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஆடை வடிவமைப்பு, ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆட்டோமொபைல், பொறியியல், இயந்திர உற்பத்தி ஆகிய துறைகளிலும் மத்திய பிரதேசம் முன்னேறி வருவதாக முதல்வர் கூறினார். மின்சார போக்குவரத்து மற்றும் மின் வாகன உற்பத்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 7, 8 தேதிகளில் கோபாலில் நடைபெறவுள்ள தொழில் மாநாட்டிற்கு அனைவரையும் பங்கேற்க அழைப்பு விடுத்த முதல்வர், மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான தொழில் இணைப்பு தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த போது, கோயம்புத்தூரின் தொழில் நிறுவனங்கள் மத்திய பிரதேசத்தின் தொழில் வளர்ச்சியில் பங்கு வகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், தமிழ்நாட்டிலிருந்து எந்த தொழில் நிறுவனங்களையும் எடுத்துச் செல்லவில்லை என்றும், தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு மத்திய பிரதேசம் சிறந்த தளமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இரு மாநிலங்களின் தொழில் நிறுவனங்களை இணைக்கும் வகையில் தொழில் அலுவலகங்கள் திறக்கப்பட்டு தொழில் இணைப்பு உருவாக்கப்படும் என்றும் முதல்வர் மோகன் யாதவ் உறுதியளித்தார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...