ஆனைகட்டி பகுதியில் உள்ள தனியார் பாரை அகற்றக் கோரி பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை ஆனைகட்டி பகுதியில் உள்ள தனியார் பாரை அகற்றக் கோரி பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மது அருந்தி பலர் உயிரிழப்பதாகவும், நிலங்கள் அபகரிக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் உள்ள தனியார் பாரை அகற்றக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



ஆனைகட்டியில் 'பிரண்ட்ஸ்' என்ற பெயரில் தனியார் கிளப் இயங்கி வருவதாகவும், அங்கு மது அருந்தி தங்கள் சமூகத்தினர் பலர் உடல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



இது தொடர்பாக தென்னிந்திய பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் முருகவேலு கூறுகையில், "கடந்த 2019ல் நாங்கள் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு ஆனைகட்டியில் இருந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. அப்போது மாவட்ட நிர்வாகம் 23 கிலோமீட்டருக்கு அப்பால் தான் இந்த கடை நிறுவப்படும் என்று உறுதியளித்தது. ஆனால் தற்போது ஆனைகட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் கிளப்புகளில் விற்கப்படும் மதுபானங்களை அருந்தி, கடந்த மூன்று மாதங்களில் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர்" என்றார்.

மேலும் அவர், "பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்ற மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி எங்கள் பகுதியில் உள்ள தனியார் பாரை அகற்றித் தர வேண்டும். எங்கள் சமூகத்தினரை மது பழக்கத்திற்கு அடிமையாக்கி அவர்களது நிலங்களை அபகரிக்கும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே அரசு நிர்வாகம் ஒத்துழைப்பு அளித்து, பழங்குடி இன மக்களின் நிலங்களை வாங்குவதோ விற்பதோ கூடாது என ஆணை பிறப்பிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

அதுமட்டுமின்றி, அப்பகுதியில் இயங்கி வரும் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை என்றும், தற்போது வழங்கப்படும் பொருட்களால் தங்கள் சமூகத்தினர் பலர் உடல் ரீதியான பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்றும் முருகவேலு குற்றம்சாட்டினார்.

"தொடர்ந்து நான்காண்டுகளாக இந்த பிரச்சனைகள் குறித்து மனு அளித்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் சமூகத்தினை பாதுகாக்க வேண்டும்" என்று முருகவேலு வலியுறுத்தினார்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...