கோவையில் மன ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு மாரத்தான் - 1200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் இந்திய மன நல மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை மற்றும் கொங்குநாடு மனநல அறக்கட்டளை சார்பில் மனதிற்கான ஓட்டம் என்ற பெயரில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இதில் 1200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


கோவை: இந்திய மன நல மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை மற்றும் கொங்குநாடு மனநல அறக்கட்டளை சார்பில் "மனதிற்கான ஓட்டம்" என்ற பெயரில் மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் கோவையில் நடைபெற்றது.

பொது மக்களிடம் மன ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த மரத்தான் தொடர் ஓட்டம் கோவை நேரு அரங்கில் தொடங்கியது.



3, 5 மற்றும் 10 கிலோமீட்டர் தூரங்களில் ஓட்டங்கள் நடைபெற்றன. பொது மக்களிடம் மனஅழுத்தம் மற்றும் மாணவர்களிடம் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் இந்த மாரத்தான் விழிப்புணர்வு அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.

ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 1200க்கும் மேற்பட்டோர் இந்த மாரத்தானில் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காவல் துறையின் முன்னாள் டிஜிபி Dr. ரவி IPS கலந்து கொண்டார். மேலும், தமிழ்நாடு மனநல சங்கத்தின் தலைவர் Dr. பன்னீர்செல்வம், இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளையின் தலைவர் Dr. பிரியா கார்த்திக்பிரபு, கொங்குநாடு மனநல அறக்கட்டளையின் தலைவர் Dr. பிரதீப் மற்றும் உறுப்பினர்களான Dr. ஸ்ரீனிவாசன், Dr. வெங்கடேஷ்குமார், Dr. மணி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை மற்றும் கேடயங்களை வழங்கினர்.

இந்திய மனநல மருத்துவ சங்கம், தமிழ்நாடு சேப்டரின் 39வது மாநில மாநாடு வருகின்ற ஜூலை 27 மற்றும் 28 தேதிகளில் கோவை ஜென்னிஸ் கிளப் அரங்கில் நடைபெற உள்ளது. "மனநல மருத்துவ துறையின் புதுமைகள்" என்ற தலைப்பில் கொங்குநாடு மனநல மருத்துவ சங்கம் இந்த மாநாட்டை நடத்த உள்ளது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் இதர பகுதிகளில் இருந்து சுமார் 800 மனநல மருத்துவர்கள் மற்றும் மனநல முதுகலை பட்டதாரி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைய உள்ளனர்.

இந்த மாநாட்டில் இந்தியாவின் முன்னணி மருத்துவமனைகளான AIIMS, NIMHANS, JIPMER ஆகியவற்றின் மனநல மருத்துவர்களின் உரையாற்றல்கள் மற்றும் விவாதங்கள் நடைபெற உள்ளன. மேலும், மனநல மருத்துவர்கள் மற்றும் முதுகலை மாணவர்களின் சுமார் 200 ஆராய்ச்சி கட்டுரைகள் இதில் அறிமுகம் செய்யப்படும். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம் மனநல மருத்துவர்கள் தங்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவும், புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் முடியும். இந்த புதுமைகள் மனநோயாளிகளின் சிகிச்சையில் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாகவே இந்த விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...