'சட்டம் ஒழுங்கு திமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லை' - வானதி சீனிவாசன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திமுக அரசின் மீது கடுமையான விமர்சனம் வைத்துள்ளார். மத்திய அரசின் திட்டங்களை பாராட்டியதோடு, திமுகவின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.


Coimbatore: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (ஜூலை 12) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அண்மைய கருத்துக்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தருமபுரி மாவட்டம், பாளையம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசியதை மேற்கோள் காட்டி, வானதி சீனிவாசன் கூறியதாவது: "மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த மூன்று ஆண்டுகளும் இப்படித்தான் மத்திய அரசை குறை கூறிக் கொண்டிருக்கிறார்."

மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்ட வானதி சீனிவாசன், "தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் திட்டங்கள், புதிய மருத்துவக் கல்லூரிகள், புதிய ரயில்கள் உள்கட்டமைப்பில் எப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது," என்று குறிப்பிட்டார்.

மேலும், "கோவை விமான நிலைய விரிவாக்கம், சென்னை புதிய விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மாநில அரசின் ஒத்துழைப்பின்மையால் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை," என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்தும் வானதி சீனிவாசன் விளக்கமளித்தார். "மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரையின் பேரிலேயே மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு வரிவிதிக்கும் அதிகாரமும் மத்திய அரசிடம் இல்லாமல் மத்திய அரசுக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக பங்கிட்டு அளிக்கப்பட்டுள்ளது," என்றார்.

தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்தார். "திமுக அரசின் லட்சணம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திலேயே தெரிந்து விட்டது. சட்டம் ஒழுங்கு என்பது திமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர் வீட்டில் முன்பு வெட்டி கொல்லப்பட்டதிலிருந்து தெரிந்துவிட்டது," என்று குறிப்பிட்டார்.

இவ்வாறு வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...