காங்கேயம் காடையூர் காடையீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பல லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காடையூரில் உள்ள காடையீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காடையூரில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பங்கசாட்சி அம்பிகை உடனமர் ஸ்ரீ காடையீஸ்வரர், ஸ்ரீ வெள்ளையம்மன், ஸ்ரீ கருணாகர பெருமாள் ஆகிய கோவில்களின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

இந்த கோவிலில் ஸ்ரீ விநாயகர் முதல் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் வரை பரிவாரங்களுடன் கூடிய ஸ்ரீ பங்கசாட்சி உடனமர் ஸ்ரீ காடேஸ்வரப் பெருமான், காக்கும் கடவுளாக விளங்கும் ஸ்ரீ கருணாகர பெருமாள், ஸ்ரீ வெள்ளையம்மன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.



கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைத்து வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. புனித நீர் கலசங்களுக்கும் சிறப்பு வேள்விகள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சிம்ம லக்கனத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் ஆன்மிகவாதிகள், பக்தர்கள், பொதுமக்கள் என பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். அனைவரும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பங்கசாட்சி அம்பிகை, ஸ்ரீ காடையீஸ்வரர், ஸ்ரீ வெள்ளையம்மன், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கருணாகர பெருமாளின் அருளைப் பெற்றனர்.

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் கோவில் விழா கமிட்டியின் மூலம் உணவு வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை காங்கேயம் காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன், காங்கேயம் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் ஊர்காவல்படையினர் மேற்கொண்டனர்.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...